கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை துறை சார்பில் நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீபாவளியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது சம்மந்தமாக ஆலோசனை மற்றும் பட்டாசுகளை எப்படி கையாள வேண்டும் என்ற செய்முறை விளக்கமும் செய்து காட்டினர்
இதில் அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், பட்டாசுகளை கொளுத்தும் போது கவனமாக மிக நெருங்கியோ, முகத்தை கட்டியோ, கையாலையோ பட்டாசுகளை கையாள கூடாது என்றும் மேலும் அப்படி செய்தால் என்ன என்ன விளைவுகள் உண்டாகும் என்பதை பற்றியும் விரிவாக தீயணைப்பு நிலைய அதிகாரி கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கமாக செய்து காட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் தீயணைப்புத் துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்