கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாரிபட்டியைச் சேர்ந்தவர் மருதை 54. இவர் நேற்று இரவு 9 மணி அளவில் குளித்தலை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் தனது ஊருக்கு செல்வதற்காக பின்பக்கபடியில் ஏற முற்பட்டு உள்ளார். அவர் சற்று மது போதையில் இருந்ததால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அவர் விலாசம் கேட்டபோது அவரது பெயர் ஊர் பெயரை மட்டும் தெரிவித்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக நாமக்கல், கரூர் என வாய் பிதற்றலாக கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.