கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் சங்கர் (22). இவர் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள ராயல் பேக்கரி அருகே கஞ்சா விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்று குளித்தலை போலீசார் கஞ்சா விற்ற சங்கர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 கிராம் கஞ்சா பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.