கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (21) கூலி தொழிலாளியான இவர் திருப்பூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி சொந்த ஊரான பொய்யாமணியில் உள்ள வீட்டில் தங்கி தனியாக இருந்தவர் கடந்த 28ஆம் தேதி அன்று பூட்டிய வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி இறந்து போனார். இதுகுறித்து அவரின் சகோதரி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை.