ரயில்வே குகை வழிப்பாதையை நேராக அமைக்க தீர்மானம்

60பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சியில் இன்று அவசர கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி பணியாளர் முத்துக்குமார் தீர்மானத்தை வாசித்தார். அதில் மருதூர் ரயில்வே கேட் அருகே ரயில்வே நிர்வாகம் குகை வழி பாதை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

இந்த குகைவழி பாதையில் பேருந்து, பள்ளி வாகனங்கள், சரக்கு லாரி மற்றும் விவசாய இடு பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் எந்தவித இடையூறு இல்லாத வகையில் சென்று வருகிறது. இந்த ரயில்வே குகை வழிபாதையை மருதூர் - மேட்டு மருதூர் தென் வடல் தார்ச்சாலையில் குகை வழி பாதையை நேராக அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ரயில்வே கோட்ட அதிகாரி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்களுக்கு நகல் அனுப்பப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த அவசர கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், கந்தசாமி, சத்தியா, பானுமதி , சுபத்ரா, சத்யபிரியா பாப்பாத்தி, தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி