வெயில் விழாத பிரதேசங்களையும் விடியவைக்க விழைகிறேன் - வைரமுத்து

79பார்த்தது
வெயில் விழாத பிரதேசங்களையும் விடியவைக்க விழைகிறேன் - வைரமுத்து
வெயில் விழாத பிரதேசங்களையும் விடியவைக்க விழைகிறேன் என விசிக மாநில கட்சி அங்கீகாரம் பெற்றதற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுவிட்டது. நாடாளுமன்றத்தின் ஈருறுப்பினர்களோடு கண்ட கனவுகளையும் கொண்ட கொள்கைகளையும் இன்று வென்றுவிட்டது.

இந்த வெற்றி தொடர்ச்சியான பாய்ச்சலுக்கும் தொய்வுறாத செயல்களுக்கும் நல்லூக்கம் தருமென்று
நம்புகிறேன். இந்த உற்சாகத்தால் வெயில் விழாத பிரதேசங்களையும் விடியவைக்க விழைகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன், து.இரவிக்குமார் இருவர்க்கும் உழைக்கும் சிறுத்தைகளுக்கும்
வாழ்த்தும் பாராட்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி