காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்

66பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இனுங்கூரில் 206 ஏக்கர் பரப்பளவில் மாநில அரசு விதை பண்ணை செயல்பட்டு வருகிறது.
தற்போது திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க அரசாணை பிறப்பித்தது. தற்போது கரூரில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக கல்லூரி செயல்பட்டு வருகிறது. மணவாசி பகுதியில் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து 206 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதியுடன் கூடிய இனுங்கூர் மாநில அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து அரசிற்கு மனு அளித்தும் உள்ளனர்.

மேலும் இனுங்கூர் மாநில அரசு விதைப்பண்ணையில் தமிழக அரசு வேளாண்மை கல்லூரி அமைத்திட வேண்டுமென வலியுறுத்தி காவிரி படுகை விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் இன்று குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண்மை கல்லூரியை குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அமைத்திட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி