கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்தை குளித்தலை நீதிமன்ற அமீனா பேருந்தை நிறுத்தி நேற்று ஜப்தி செய்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் இழப்பீடு தொகை நிலுவையில் இருப்பதாக கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு குளித்தலை நீதிமன்றம் மூலம் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதனை அடுத்து கோவை அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டதாக நீதிமன்ற அமீனா பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் தெரிவித்து பயணிகளை இறக்க கூறியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் எங்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் ஏற்கனவே நேரம் ஆகிவிட்டது. பேருந்தை இயக்க விடுங்கள் என சகப் பயணிகளுடன் நீதிமன்ற அமினாவிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இறக்கி விடப்பட்ட பயணிகளை பின்னால் வந்த அரசு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.