கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரிய பனையூர் பகுதியைச் சேர்ந்தவர் கலா (55). இவர் கடந்த 22 ஆம் தேதி தனது மருமகள் வினிதாவுடன் தனது வீட்டின் அருகே வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமர் தகாத வார்த்தையால் திட்டி கையால் அடித்து கீழே தள்ளி உள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டார். இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குளித்தலை போலீசார் நேற்று(செப்.28) வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.