ரயில்வே குகைவழிப் பாதை அமைக்கும் பணி தீவிரம்

52பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சி மருதூர் - மேட்டு மருதூர் நெடுஞ்சாலையில் ரயில்வே கேட்டு உள்ளது. இந்த ரயில்வே கேட்டில் குகை வழி பாதை அமைக்கும் பணி கடந்த 2019 தொடங்கியது.

பல்வேறு பணியின் காரணமாக இந்த ரயில்வே கேட்டில் குகை வழி பாதை அமைக்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி குகை வழிப் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

இன்று மதியம் 12 மணி முதல் இரவு. 6. 30 மணி வரை ரயில்வே போக்குவரத்து நிறுத்தம் செய்து, சேலம் ரயில்வே கோட்ட தலைமை பொறியாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் 30 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட ரயில்வே மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் கிரேன் இயந்திரங்கள் உதவியுடன் குகை வழி பாதை காண சிமெண்ட் கட்டைகள் அமைக்கப்பட்டது.

இந்த குகைவழிப்பாதை 3 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குகை வழிப்பாதை அனைத்து பணிகளும் முடியும் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதி பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வருவதற்கு மாற்று பாதையாக பட்டவர்த்தி குகைவழிப்பாதை வரை ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் ரயில்வே பாதையின் தென்பகுதியில் பாதை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் ரயில்வே கோட்ட தலைமை பொறியாளர் கார்த்திகேயனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி