நமது நாட்டின் சிறந்த அறிஞராகவும், ஆசிரியராகவும் இருந்த இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் வாழ்க்கையும், எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த தினத்தை மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். சமுதாய நலனுக்காக உழைக்கும் ஆசிரியர்களை இந்த தினத்தில் போற்றுவோம்.