கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் மற்றும் ஆசிரியர் தின ஐம்பெரும் விழா குளித்தலை தமிழ்ச் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. குளித்தலை தமிழ்ச் சங்க செயலாளர் மாணிக்கவாசகம், துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
குளித்தலை தமிழ் பேரவை தலைவர் கடவூர் மணிமாறன், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரி முதல்வர் மருதை, பெரியார் ஈவேரா கல்லூரி தமிழ் துறை தலைவர் செயலாபதி, குளித்தலை கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளார் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
ஐம்பெரும் விழாவினை முன்னிட்டு 150 ஆசிரிய பெருமக்களுக்கு நல்லாசிரியர் மாமணி விருதும் மற்றும் பள்ளிகளில் வைக்கப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த ஐம்பெரும் விழாவில் மதிமுகவை சேர்ந்த பால சசிகுமார், விசிக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், தமிழ் ஆசிரியர் மாவட்ட கழக செயலாளர் மணிகண்டன், தமிழ் சங்க பொருளாளர் கார்த்திகேயன், தமிழ் சங்கத் துணைச் செயலாளர் ரங்கநாதன் பொருளாளர் மகேந்திரன், து. தலைவர் மணிகண்டன், பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்