கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா மைலம்பட்டி மற்றும் தரகம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் லாட்டரி சீட்டு விற்ற ராஜலிங்கம் (42), சிராஜுதீன் (42) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 10 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்