பாலிடெக்னிக் பின்புறம் சூதாடிய மூவர் கைது. ரூ. 350 பறிமுதல்.

64பார்த்தது
பாலிடெக்னிக் பின்புறம் சூதாடிய மூவர் கைது. ரூ. 350 பறிமுதல்.
பாலிடெக்னிக் பின்புறம் பணம் வைத்து சூதாடிய மூவர் கைது. 350 பறிமுதல்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கட்ரமணா பாலிடெக்னிக் கல்லூரி அருகே, பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமிக்கு தகவல் கிடைத்தது.


தகவலின் அடிப்படையில், டிசம்பர் 30ஆம் தேதி இரவு 7 மணி அளவில் வெங்கட்ரமணா பாலிடெக்னிக் கல்லூரி உள்ள அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அந்த கல்லூரியின் பின்புறத்தில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல், மாணிக்கபுரம், லந்தகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சிவா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 350 பறிமுதல் செய்தனர்.

பின்னர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி