கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டம் மகலூ கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்னகர் (40). மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவி தன்னைவிட்டுப் பிரிந்துசென்ற ஆத்திரத்தில், மாமியார் வீட்டிற்குத் துப்பாக்கியுடன் சென்றுள்ளார். பின்னர் அங்கு இருந்த தனது மகள், மவ்யா (6), மாமியார் ஜோதி (50), அவரது மகள் சிந்து (24), சிந்துவின் கணவர் அவினாஷ் (38) ஆகியோரைத் துப்பாக்கியால் சுரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் அவினாஷைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர். மேலும் ரத்னகர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.