சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வக்ஃப் வாரியத்திடம் நாடு முழுவதும் சுமார் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. அவை 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.2 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. அதாவது நமது நாட்டில் அதிக நில உடைமைகளை வைத்திருக்கும் முதல் மூன்று தரப்பு: பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ரயில்வே மற்றும் வக்ஃப் வாரியம் என கூறலாம்.