RCB அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த RCB அணிக்கு குஜராத் பௌலர்கள் அதிர்ச்சியளித்தனர். விராட் கோலி 7, படிக்கல் 4, ரஜத் பட்டிதார் 12 மற்றும் பில் சால்ட் 14 சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். RCB அணி தற்போது, 7 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 48 ரன்கள் எடுத்துள்ளது.