கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சின்னமுத்தம்பாடி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (60). இவர் திமுக 14 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பம்பு செட் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 900 மீட்டர் வயரை யாரோ திருடி சென்று விட்டனர். புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு.