ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசும் நிவாரண நிதி ரூபாய் 2000 அறிவித்துள்ளது. இதனிடையே, நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.