விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில், போட்டியாளர்களாக உள்ள அருண் மற்றும் முத்துவுக்கு இடையே சில வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா மற்றும் அருண் காதலிப்பதாக கூறப்பட்டதால், தற்போது முத்துவின் ரசிகர்கள் அர்ச்சனா மீது ஆசிட் வீசப் போவதாகவும், பலாத்காரம் செய்யப் போவதாகவும் சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசில் அர்ச்சனா புகார் அளித்துள்ளார்.