காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய கார்டனில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது குரங்கு ஒன்று அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. அந்தக் குரங்கு நேராக எனது மடி மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. பசியுடன் இருந்த அந்த குரங்கு, நாங்கள் கொடுத்த வாழைப்பழத்தை நன்றாக சாப்பிட்டது. அரவணைப்பாக அதன் தலையை என் தோள் மீது சாய்த்து உறங்கியே விட்டது என பதிவிட்டுள்ளார்.