இயக்குநர் எஸ்.ஏ.சி பேரனும், நடிகர் விஜயின் மகனுமான ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ள நிலையில் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஜேசன் இயக்க இருக்கும் படத்திற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் நேரடியாக களமிறங்கும் அவருக்கு முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளமா என கோலிவுட் வாய்ப்பிளக்கிறது.