விசிக மகளிரணி சார்பில் பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கல்

65பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் கிருஷ்ணராயபுரம் கடைவீதி, கோவக்குளம் சங்கரமலைப்பட்டி முனையனூர் ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் துண்டறிக்கை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொ. மகாமுனி (எ) வன்னியரசு தலைமையில் கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் இரா. உதயநிதி முன்னிலையில் மகளிர் அணி செ. கோமதி, நா. சரிதா, புகழேந்தி, வீரமணி, கிருஷ்ணமூர்த்தி, பார்த்திபன், சுதாகர், சேங்கல் பூபதி, முனையனூர் பசுபதி, மலைப்பட்டி ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டு துண்டறிக்கைகளை வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி