மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்களை பெற்ற ஆட்சியர்.

75பார்த்தது
செல்லாண்டி பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை ஊராட்சியில் உள்ள செல்லாண்டிபட்டியில் இன்று ஊரகப்பகுதியில் "மக்கள் உடன் முதல்வர் திட்டம்" முகாமில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், துணை மேயர் சரவணன் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிவகாமி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார்பாக தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுவாக அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி