கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லிவிஸ் அபிஷேக் (வயது 20). இவர் கடந்த 24 ஆம் தேதி அன்று அப்பகுதியில் உள்ள மல்லாண்டவர் கோவில் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அலெக்ஸ் பாண்டியன், சபரி, இளையராஜா, விஜயகுமார் ஆகிய 4 பேர் கஞ்சா குடிப்பதை நீதான் சொல்லி இருக்கிறாய் எனக்கூறி பைக் சாவியால் தலையில் குத்தி கையாளும் காலாலும் அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த லிவிஸ் அபிஷேக் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். அதனையடுத்து 4 பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து இளையராஜாவை கைது செய்தனர்.