முதல் நாள் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு

85பார்த்தது
கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் நாள் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. முதல் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் செல்வதற்கான முதல் நாள் ஜூன் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு பின்னர் பள்ளிக்கல்வித்துறையால் ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல் நாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் கரூர் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை அப்பள்ளியில் பயிலும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி