புகைப்பிடிப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றினால், அவர்களின் ஆரோக்கியம் ஆபத்தில் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புகையிலை நுரையீரலில் புற்றுநோய் செல்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. கடுமையான இருமல், நெஞ்சு வலி, தூக்கமின்மை ஆகியவை இதன் அறிகுறிகளாகும். புகையிலையை பயன்படுத்துபவர்களுக்கு சுவாச தொற்று மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. புகையிலையில் உள்ள இரசாயனங்கள் இரத்த நாளங்களில் நுழைந்து அவற்றை சேதப்படுத்தும். இது மூளையை சேதப்படுத்தி பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.