கரூர் வந்தடைந்த விவசாயிகள் உரிமை மீட்பு பேரணி

56பார்த்தது
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் துவங்கி கரூர் பேருந்து நிலையம் அருகில் ஜூன் 12-ம் தேதி மேகதாது அணையை திறந்திட வேண்டிய கர்நாடகாவில் உரிய தண்ணீரை தமிழக அரசு பெற்றுத் தரக் கோரியும் மேகத்தாட்டு அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த கோரியும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி நடைபெற்றது.

முன்னதாக திருச்சி மாவட்டத்திலிருந்து குளித்தலை லாலாபேட்டை வழியாக கரூர் லைட் ஹவுஸ் கார்னர் வந்தடைந்த பேரணி, கரூர் உழவர் சந்தை வழியாக, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா வந்தடைந்தது விவசாயிகள் வழி முழுவதும் ஒன்றிய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :