ஒய்.எஸ்.ஆர். ஆட்சியை பிடிக்கும் என கூறி ரூ.30 கோடி பந்தயம்

68பார்த்தது
ஒய்.எஸ்.ஆர். ஆட்சியை பிடிக்கும் என கூறி ரூ.30 கோடி பந்தயம்
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே தேர்தல் முடிவு வெளியான நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெறும் என 30 கோடி ரூபாய் வரை பந்தயம் கட்டியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி (52) தனது கிராமத்தை சுற்றி உள்ளவர்களிடம் ரூ.30 கோடி ருபாய் வரை பந்தயம் கட்டியுள்ளார். இந்த நிலையில் கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் தலைமறைவானார். அவரிடம் பந்தயம் கட்டியவர்கள் அவரது வீட்டை சூறையாடினர். இதனால் மனமுடைந்த வேணுகோபால ரெட்டி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி