அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

70பார்த்தது
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 7 நாட்களுக்கு வெப்பச்சலன மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலன மழை என்பது, காலை, பகல் நேரங்களில் இருக்காது. மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்று, இடி மின்னலுடன் கூடிய மழையாக பெய்யும்.

தொடர்புடைய செய்தி