விசிக - மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு பிரச்சாரம்

59பார்த்தது
அக்டோபர் 2 அன்று உளுந்தூர்பேட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடப்பதையொட்டி விளக்க பேரணி கரூர் காமராஜர் சிலையிலிருந்து லைட் ஹவுஸ் காந்தி சிலை வரை நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அ. சக்திவேல், மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, மாநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் மாவட்ட பொருளாளர் சதீஷ், அவிநாசி, மகளிர் அணி அன்னபூரணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொ. மகாமுனி (எ) வன்னியரசு, மாநில நிர்வாகிகள் அகரமுத்து, கத்தார் மாணிக்கம், அருள், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், ஜவகர், உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் மணிமாறன், கரூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், டேவிட், பிரித்திக், டாஸ்மாக் விஜயகுமார், மகளிர் அணி நிர்வாகிகள் கோவக்குளம் செ. கோமதி, உப்பிடமங்கலம் சாந்தி, வெள்ளியனை கமலம், பிரியா ஆகியோர் ஏற்பாட்டில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி