வெங்கடாபுரம்-நின்று இருந்த வாலிபர் மீது டூவீலர் மோதி விபத்து.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, எலவனூர் அருகே உள்ள சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விவேக் குமார் வயது 33.
இவர் அக்டோபர் 5-ம் தேதி மாலை 6: 30- அளவில், கரூர் - தாராபுரம் சாலையில் உள்ள வெங்கடாபுரம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் செட்டியார் மகன் ஆறுமுகம் வயது 37 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நின்று கொண்டு இருந்த விவேக் குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த விவேக்குமாருக்கு தலை, இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விவேக் குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.