ஊருக்கு செல்வது போல் வழி கேட்டு வழிப்பறி செய்த இருவர் கைது.

72பார்த்தது
துலுக்கம்பாளையம் அருகே ஊருக்கு செல்வது போல் வழி கேட்டு வழிப்பறி செய்த இருவர் கைது.


கரூர் மாவட்டம்,
க. பரமத்தி, பூலாங்காலிவலசு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் வயது 38.

இவர் பூலாங்காலி வலசு பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்றை எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 8-ம் தேதி காலை 7 மணி அளவில், பரமத்தியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் உள்ள துலுக்கம்பாளையம் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பதிவெண் இல்லாத டூவீலரில் வந்த, கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சங்கிலி பூசாரியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா வயது 20, அருகிலுள்ள கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கரத்தினம் வயது 26 ஆகிய இருவரும் பால்ராஜ் இடம் சென்று, கோயம்புத்தூர் செல்வதற்காக வழி கேட்பது போல் நடித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 4000-த்தை பறித்துள்ளனர்.


அப்போது பால்ராஜ் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்து பரமத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, ஏப்ரல் 22ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். க. பரமத்தி காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி