காங்கேயம்பாளையம் புதூரில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.

75பார்த்தது
காங்கேயம் பாளையம் புதூரில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நஞ்சை தலையூர் அருகே பாலகுமார் நகரை சேர்ந்தவர் முருகன் வயது 65.

இவர் ஏப்ரல் 5-ம் தேதி மாலை 4 மணி அளவில், கரூர் - தாராபுரம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் காங்கேயம் பாளையம் புதூர் பிரிவு சாலை அருகே வந்த போது, அதே சாலையில் கரூர், பசுபதி பாளையம், பாரதியார் 2-வது தெருவை சேர்ந்த குமரவேல் வயது 45 என்பவர் ஓட்டி வந்த கார் முருகன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த முருகனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக கார் வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குமரவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்னதாதாராபுரம் காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி