புகழூர்-முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய 4- பேர் கைது.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, வேலாயுதம்பாளையம், ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் நந்தகுமார் வயது 20.
இவருக்கும் முருகம்பாளையத்தைச் சேர்ந்த முகமது நிசாருதீன் வயது 18 என்ற இளைஞருக்கும் ஏற்கனவே ஏற்பட்ட வாய் தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி இரவு 9: 30 மணி அளவில் நந்தகுமார் அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு சென்ற முகமது நிஷாருதீன் மற்றும் ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்த விஜய், சரவணன், பாண்டியன், முருகம்பாளையத்தைச் சேர்ந்த இப்ராஹிம் ஆகியோர் நந்தகுமாரை தகாத வார்த்தை பேசி, தடி & இரும்பு ராடால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் காயமுற்ற நந்தகுமார் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதே சம்பவத்தில் விஜய்க்கு ஏற்பட்ட உள் காயம் காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக நந்தகுமார் அளித்த புகாரில், சம்பவ இடத்தில் விசாரணை செய்த காவல்துறையினர், முகமது நிசாருதீன், சரவணன், பாண்டியன், இப்ராஹிம் ஆகிய 4- பேரை கைது செய்து, 5-பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.