அரவக்குறிச்சி- த. வெ. க. இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

56பார்த்தது
தமிழக வெற்றி கழகம் சார்பில் அரவக்குறிச்சியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 7 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இப்தார் நோன்பு சிறப்பு பிரார்த்தனை கலந்து கொண்டார்.


அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.


தமிழக வெற்றிக் கழகம் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில், அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி