அரவக்குறிச்சி முருங்கைகாய் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு.

54பார்த்தது
அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் முருங்கை சாகுபடி சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழை, கரூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவில் பெய்ததால் மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடி விவசாயிகள் துவக்கினார்


வழக்கமாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை முருங்கைக்காய்க்கு சீசன் காலமாகும்.

கரூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது.

அதேசமயம் அரவக்குறிச்சி,
க. பரமத்தி சுற்றுவட்டாரத்தில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை.

இதனால் முருங்கை உற்பத்தி குறைந்து, முருங்கை மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது.

இதனால், முருங்கைக்காய் விலை படிப்படியாக தற்போது அதிகரித்து வருகிறது.

விலை அதிகரித்து வரும் வேளையில் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், இனி வரும் ஆடி மாதத்தில் முகூர்த்தங்கள் ஏதும் இல்லாததால், அப்போது நுகர்வு குறைவாக இருக்கும்.

நுகர்வு குறைவாகும் போது விலையும் குறைந்து விடும் என்பதை அறிந்து, விவசாயிகள் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி