SBI, PNB போன்ற வங்கிகள் உடனான பரிவர்த்தனைகளை உடனடியாக நிறுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அரசுத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த நிலையான வைப்புத்தொகையை தனியார் நிறுவனத்தின் கடன்களை சரிகட்ட SBI வங்கி பயன்படுத்தியதாகவும், PNB வங்கி முழுமையான தொகையை திரும்பத் தரவில்லை எனவும் கர்நாடக அரசு குற்றச்சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த வங்கிகளில் உள்ள கணக்குகளை மூடி, டெபாசிட் தொகையை திரும்பப்பெற வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அம்மாநில நிதித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.