குமரி ஆட்சியரிடம் நாம் தமிழர் மனு
நாம் தமிழர் கட்சியினர் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், "ராமநாதிச்சன் புதூரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்குவாரியினால் அப்பகுதியில் வாகன நெருக்கடியும் தூசி புகைகளும் உருவாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆபத்தான வகையில் வாகனங்கள் செல்கின்றன. எனவே, இந்த கல்குவாரியை மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.