கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின் கால்வாயில் வெள்ளைச் சேத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.