கழுவன்திட்டை சாமுண்டீஸ்வரி கோவிலில் சுமங்கலி பூஜை

56பார்த்தது
திருவட்டார் அருகே
ஆற்றூர் கழுவன்திட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் 26-வது ஆண்டு திருவிழா கடந்த 21. ந்தேதி துவங்கி நடந்து வருகிறது.  
ஐந்தாம் திருவிழா நாளான இன்று 18 வகை நறுமணப்பொருட்களால் அபிஷேகம்,   திருவட்டார் ஒன்றிய இந்து கோவில் கூட்டமைப்பு பிரார்த்தனைக்குழு தலைவர்  லேகா நடராஜன் தலைமையில்  சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளம் பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து  அன்னதானம்,   வில்லிசை,   குடியிருப்பு பூஜை, வலிய படுக்கை,   அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது.  
ஆறாம் நாளான நாளை (26. ந் தேதி வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு  கோவில் சம்பந்தமான பூஜைகள், வில்லிசை, காலை 7 மணிக்கு  நாதஸ்வரம், நையாண்டி மேளத்துடன் அம்மன் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல், 12 மணிக்கு தாரை, தப்பட்டை, மதியம் அன்னதானம்  மதியம் 1. 45 மணிக்கு பறக்கும் காவடி,   தேர்க்காவடி, கதிர்வேல் காவடி, கன்னவேல் என வேல் காவடி தரிக்கும் நிகழ்ச்சி, மாலை 3 மணிக்கு மூவாற்று முகம் ஆற்றுக்கு பூநீர் எடுக்கச்செல்லுதல்,   மாலை 6 மணிக்கு முத்துக்குடை, தாலப்பொலி, வேல்காவடி, அலங்கார வாகனங்களுடன் கழுவன் திட்டை, திருவட்டார், உத்திரம் விளை வழியாக பூநீர் கும்ப பவனி  கோவிலுக்குத்திரும்புதல் , மாலை 6 மணிக்கு    வில்லிசை,   இரவு 11 மணிக்கு அம்மன் பூக்குழி இறங்குதல், 11. 30 மணிக்கு மகா தீபாராதனை ஆகியன நடக்கிறது.

தொடர்புடைய செய்தி