குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்? விளக்கம்

65பார்த்தது
குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்? விளக்கம்
டெக்டோனிக் பிளேட் நகர்வால் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாகப் பிரிய தொடங்கியுள்ளது. அதன் சில பகுதிகள் தென் தமிழகத்துடன் மோதி புதிய மலைகள் உருவாகி, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இமயமலை போன்ற குளிர்பிரதேசங்களாக மாறும் என்ற கருத்து பரவி வந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள புவிசார் துறை செயலாளர், “இந்த நிகழ்வு நடக்க இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும். இது சில 100 ஆண்டுகள், 1000 ஆண்டுகளிலோ நடக்கக்கூடிய விஷயம் அல்ல. எனவே இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி