மதுரை மாவட்டம் அய்யனார் தெருவை சேர்ந்தவர் முத்து கார்த்திக் (28), இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில்
வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து புனலூர் செல்லும் ரயிலில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்வே நிலையத்தில் வந்தபோது தன்னிடம் பேக்கில் இருந்த லேப்டாப்பை பார்த்து உள்ளார். அப்போது லேப்டாப்பை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குழித்துறை ரயில்வே நிலையத்தில் இறங்கி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.