மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் மீது விவசாயிகள் எஸ்பியிடம் புகார்

66பார்த்தது
மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் மீது விவசாயிகள் எஸ்பியிடம் புகார்
கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் மஞ்சக்குழி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு வடிகால் வாரியத்திற்கு உரிமையான மஞ்சக்குழி ஊற்று வடிகால் உள்ளது. இந்த வடிகாலை தடுத்து பேரூராட்சி நிர்வாகம் மதில் சுவர் எழுப்பி உள்ளது.  

      இதனால்  விவசாயம்  பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தடுப்புச் சுவர் பணியை விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மீது பேரூராட்சி சார்பில் பொய் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

     இந்த செயலுக்கு துணை போகின்ற மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் மீதும், பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் பேரூராட்சி தலைவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மஞ்சக்குழி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று (26-ம் தேதி) மாவட்ட எஸ் பி யிடம் புகார் அளித்தனர். உண்ணாமலைக்கடை பாஜக செயற்குழு உறுப்பினர் சீமா செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி