கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இன்று அமைந்துள்ள பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக சாம் செல்வராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கிள்ளியூர் உண்ணாமலைக்கடை, நல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செய்யப்பட்டுவரும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பில் எழுத லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருவர் மாறுவேடத்தில் வந்தபோது அங்கு பணியில் இருந்த சாம் செல்வராஜ் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்குவதை கண்டு கையும் களவுமாக பிடித்துள்ளார். தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் வந்த அதிகாரிகள் இளநிலை பொறியாளரை பிடித்து விசாரணை நடத்தி அவரை சோதனை செய்தபோது அவரது பேன்ட் பாக்கெட் மணிபர்ஸ் ஆகிய இடங்களில் கட்டு கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்துள்ளார்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரது காரை சோதனை செய்தபோது காரில் ஒரு பையிலும் பின்பக்க டிக்கியில் கோப்புகளுக்கு இடையேயும் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததோடு அந்த பணங்கள் எதுவும் கணக்கில் வராதது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பறிமுதல் செய்த பணம் முழுவதையும் எண்ணி பார்த்தபோது சுமார் 5 லட்சத்து 34 ஆயிரம் ருபாய் இருந்தது தெரியவந்தது.