திருவட்டாறு:  ஆற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி

65பார்த்தது
திருவட்டாறு:  ஆற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி
திருவட்டாறு பகுதியில் உள்ள பரளியாற்றில் நேற்று மதியம் ஒரு ஆண் பிணம் தண்ணீரில் கிடந்தது. இதை ஆற்றில் குளிக்க சென்றவர்கள் பார்த்து திருவட்டாறு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி, இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி வில்சன் (56) என்பது தெரியவந்தது. இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உண்டு.

வில்சன் சமீப காலமாக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அவர் ஆற்றின் கரையோரம் சென்றபோது கால் தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து உடலை போலீசார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக திருவட்டாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி