குமரி விவேகானந்தர் மண்டபம்: 3 நாட்களில் 20 ஆயிரம் பேர் பார்வை

60பார்த்தது
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவை உள்ளன. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

      இதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக பூம்புகார் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி முதல் இன்று (26-ம் தேதி) வரை தொடர் விடுமுறையாகும். இந்த தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

      இந்த வகையில் கடந்த 24ஆம் தேதி முதல் இன்று 26 ஆம் தேதி வரை 3 நாட்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 20 ஆயிரத்து 128 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 977 பேரும் ஞாயிற்றுக்கிழமை 8 ஆயிரத்து 51 பேரும், கிருஷ்ண ஜெயந்தி ஆன இன்று 6 ஆயிரத்து 100 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு சென்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி