நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு" எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாடு அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ் மொழியையும் அவமதிக்கும் செயல்" என்ரு பதிவிட்டுள்ளார்.