கேரளபுரம்: விநாயகர் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்ற குழந்தைகள்

75பார்த்தது
இந்துக்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை முன்னிட்டு,  விநாயகர் ஆலயங்கள் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிகப்பட்டி ருந்தன. சிறிய விநாயகர் கோயில் முதல் பெரிய மற்றும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் உள்ள விநாயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷே கம், பூஜைகள், கணபதி ஹோமம் நடைபெற்றன. மாலையில் சிறப்பு பூஜை கள் நடைபெற்றன.

வீடுகளிலும், சிறிய அளவிலான பல வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் பூஜை அறையில் வைக்கப்பட்டு, அருகம்புல் மாலை அணி வித்து பூஜைகள் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் தக்கலை பெருமாள் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், அம்மன் வேடமணிந்த சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அதிசய விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர். தக்கலை, பிரம்மபுரம், பத்மநாபபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த ஏராளம்  குழந்தைகள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி