விலையில்லா பள்ளி சீருடைகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

85பார்த்தது
விலையில்லா பள்ளி சீருடைகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில்    இன்று (29. 07. 2024) நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கலந்து கொண்டு, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கி பேசுகையில்-
    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 56, 462 குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக  இன்று மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 30 க்குள் (30. 09. 2024) இரண்டாம் கட்டமாக  இணை சீருடைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   3வது மற்றும் 4வது இணை சீருடைகள் தேவைப்பட்டியல் கிடைக்கப் பெற்ற பின்னர் நவம்பர்  2024 க்குள் வழங்கி முடிக்கப்படும். என தெரிவித்தார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி,   தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜாண்சன், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி